Thuraiyur Bus time table, Shop details, Events, Important notifications and news available here.

துறையூர் நகரம் வளர்ச்சி சம்மந்தமான மக்களின் விழிப்புணர்வு முயற்சிகள்

1. வீட்டுவரி , தொழில்வரி , தண்ணீர் வரி , சாக்கடை வரி , குப்பை வரி , கடை வரி, மண்டி வருமான வரி பலவாரிகளை கட்டி வருகிறோம். எல்லாவரிகளும் நமக்கு வந்து சேர்கிறதா இல்லை , இல்லை , இல்லை.  எந்த வழியில் நாம் கட்டும் வரி சேரும் என்பதை சிந்தனை செய்யவில்லை , மாநகராட்சி மன்றம் , நகராட்சி மன்றம் , பேரூராட்சி , ஊராட்சி மன்றத்தின் மூலம் பொது நல அரசாங்கத்தின் மூலம் வருவதற்கு மக்கள் மன்றம் முயற்சி செய்து செயல்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கத்திற்கு வழிகாட்ட மக்கள் முயற்சி செய்ய வேண்டும்.

2.சுத்தம் : நாம் சுத்தமாக இருக்க கற்றுக்கொள்கிறோம். குடும்பம் சுத்தமாக இருக்க கற்றுக்கொள்கிறது. வெளிப்புறம் சுத்தமாக இருக்கிறதா? என்பதை சிந்திக்கவும் இல்லை , இல்லை , இல்லை , துறையூர் பெரியரி , சிறிய ஏரி , குளம் , குட்டை வெளிப்புறம் சுத்தம் இருக்கிறதா ?இல்லை , இல்லை, இல்லை. மக்கள் முயற்சி அரசாங்க முயற்சி விழிப்புணர்வு வேண்டும் , வேண்டும் , வேண்டும்.

3 .தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டு செய்கிறோம் , தேர்தலில் நிற்பவர் பணத்திற்கு அடிமை ஆகி கட்டுப்பாட்டுடன் செலவு செய்து வெற்றி பெறவேண்டும். இன்று வரை ஜெயித்தவர் என்ன செய்திருக்கிறார்கள் ஒன்றும் செய்யவில்லை, இறையர் பொருத்தவரை தொழிற்சாலை தொழில் கல்வி , தொழில் பேட்டை அரசாங்க காலேஜ் , ரயில் நிலையம் உற்பத்தி நிலையம் ஒன்றும் செய்யவில்லை , சுயேச்சைகளை நல்லது செய்கிறவர்களை மக்கள் ஒட்டு செய்ய , வேண்டும்.

காசு வாங்கி ஒட்டு செய்பவர்களை வெற்றி பெறுபவர் உன் ஒரு ஓட்டைக் கொண்டு நான் வெற்றிவற்றேனா என்று வேலை விஷயமாக சென்று கேட்கும் போது ஏளனமாகப்பேசி மனது புண்படும்படியாக பேசுவார்கள் , காசு வாங்கி ஓட்டுப் போடக் கூடாது .தெரிந்தவர்க்கு ஓட்டுப் போடலாம் அதில் தவறு இல்லை .

துறையூர் நகரம் பொதுநலசமூக சேவை நற்பணி மன்றம்
உயர்திரு. து .சி .இராசமாணிக்கம் நற்பணி மன்றம் தலைவர் அவர்கள்
பொருள் : துறையூர் நகரம் வளர்ச்சி சம்மந்தமான மக்களின் விழிப்புணர்வு முயற்சிகள்