துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.


துறையூரில் மின்தடை

துறையூர் பகுதியில் அக்டோபர் 8 அன்று மின்தடை அறிவிப்பு: முழு விவரங்கள்! துறையூர் 110/22-11 KV துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 08.10.2026 (வியாழக்கிழமை) அன்று மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

⏰ மின்தடை நேரம்:
 * காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை




📍 மின்தடை ஏற்படும் பகுதிகள்:
துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:
 * துறையூர்
 * முருகூர்
 * கோணப்பாதை
 * சிறுநத்தம்
 * சிக்கத்தம்பூர்
 * சேருகாரன்பட்டி
 * ஒக்கரை
 * கீரம்பூர்
 * சொரத்தூர்
 * நாகலாபுரம்
 * கோம்பைபுதூர்
 * செங்காட்டுப்பட்டி
 * சிங்களாந்தபுரம்
 * காளியாம்பட்டி
 * நல்லவண்ணிப்பட்டி
 * பகளவாடி
 * அம்மாபட்டி
 * முத்தயம்பாளையம்
 * மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.


அறிவிப்பு: தமிழ்நாடு மின்சார வாரியம், துறையூர் கோட்டம்

பொதுமக்கள் இந்த பராமரிப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

துணை சபாநாயகராக துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்

 தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம். ரவிசங்கர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



2026 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக ரவிசங்கர் எம்எல்ஏ ஆனார் . அவர் 66,263 வாக்குகள் பெற்று, தனது போட்டியாளர்களை விட 9,614 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்

திருச்சி பச்சைமலை அருகே வயல்வெளியில் மருத்துவமனை கட்ட மலைவாழ் மக்கள் எதிர்ப்பு



திருச்சி மாவட்டம் , துறையூர் வட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்டபட்ட தாளூர் கிராம மலைவாழ் மக்கள் அப்பகுதி வயல்வெளியில் மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஸ்டாலின்குமார் அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை துவக்கி வைத்தார்



தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் B.E., அவர்கள் ஜெமீன்தார் பள்ளி அரங்கில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பயணாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை துவக்கி வைத்தார். துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

துறையூரில் கொரோனா உச்சக்கட்டம் | சாலைகள் அடைக்கப்பட்டது



தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் அடுத்தடுத்து பலரும் பாதிக்கப்படுகின்றனர். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.