துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



17ஆம் தேதி முதல் இ - பதிவு முறை அமலுக்கு வருகிறது


17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ - பதிவு முறை கட்டாயம் ஆக்கப்படுகிறது.ep திருமணம் முக்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் முதியவர்களுக்கான தேவை ஆகியவற்றுக்கு இ -பதிவு கட்டாயம்

https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

துறையூர் மக்கள் கவலை - சாலை பணி நிறைவு செய்யாததால்



துறையூர் பிரிவு ரோடு, பெரம்பலூர் புறவழி சாலையில் புதிதாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரோடு தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. நகரின் முக்கிய பகுதியாகவும், கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய பகுதியாகவும் உள்ளதால் அந்த வழியாக சாலையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் சீரமைக்கப்படாமல் இருக்கும் ரோட்டில் பயணிக்கும் போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எந்த பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம்



தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவரும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்



சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் இன்று மாலை காலமானார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதில் நமது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றகக்கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு.பிரபாகரன் அவர்கள் வெற்றிப்பெற்றுள்ளார். நமது தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,36,708. அதில் 29311 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.