துறையூர் சதிக்கல் வரலாறு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கி.பி 14 ஆம் நூற்றாண்டு சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் இடதுபுறம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த பழமையான கோயில் இடிந்த நிலையில் உள்ளது. இந்த கோயிலின் மண் மண்டபத்தில் 700 ஆண்டுகள் பழமையான சதிக்கல் காணப்படுகிறது. பொதுவாக முற்காலத்தில் ஆண்வீரச்செயல்புரிந்து இறந்தால்தான் அவன் இறந்த இடத்தில் நடுகல் நடப்பட்டு வழிபடப்படும். அந்த வகையில் கணவன் இறந்ததும் மனைவியும் தீக்குளித்து இறந்து விடுவது உண்டு.
அவ்வாறு இறந்த பெண்ணின் நினைவாக நடப்படுவது தான் சதிக்கல் ஆகும். இங்கு கண்டறியப்பட்ட சதிக்கல்லின் அமைப்பு ஒரு ஆண் சிற்பம் தலைப்பாகையோடு நடுவில் அமர்ந்த நிலையில் தனது இடக்கால் மடித்தவாறும் வலதுகையால் இடதுபுறத்தில் உள்ள வாளை பிடித்த நிலையிலும், காதில் வளையம் அணிந்த நிலையிலும் காணப்படுகிறது. இந்த சதிக்கல் சிற்பத்தின் இருபுறமும் இரு பெண்கள் அமர்ந்துள்ள நிலையில் ஒரு கையில் மலர் ஏந்தியவாறும் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணவன் இறந்தவுடன் மனைவி தீப்பாய்ந்து இறத்தலைப் பற்றி தொல்காப்பியம்
சிற்பங்களின் அமைப்பை ஆய்வு செய்ததில் இது நாயக்க அரசன் அரசியர்க்கு அமைக்கப்பட்ட சதிக்கல் என்பது தெரிகிறது. கி.பி 14ம் நூற்றாண்டில் துறையூர் பகுதியை நாயக்கமன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன அதுமட்டுமின்றி புஜீன் ஜெமீந்தார்களும் துறையூர் பகுதியை ஆட்சி செய்துள்ளனர். நாயக்கர் கால கட்டுமான கோயில்களை துறையூர் பெருமாள்மலை, தெப்பக்குளம் மண்டபம், பகளவாடி மண்பறை போன்ற இடங்களில் காணலாம்.
சதிகல்லின் பொதுவான அமைப்பு சதிகல்லில் வீரனின் உருவம் இருக்கும். தீப்பாய்ந்து இறந்த வீரனின் மனைவி உருவம் இருக்கும். அதே போன்று மூன்று பெண் உருவங்கள் ஒரு கல்லில் இடம்பெற்றிருக்கும். இரண்டு பெண்களின் உருவத்திற்கு நடுவில் இறந்த வீரனின் உருவம் சில கற்களில் இடம் பெற்றிருக்கும். சில கற்களின் பின்புறம் வீரனின் சிலையும் இருக்கும். இது போன்ற கற்களின் அருகே மூன்று பெண்கள் கைக்கூப்பி இருப்பது போன்று கல்லில் செதுக்கப்பட்டு இருக்கும். இவர்களை அப்சரப் பெண்கள் (வான மங்கையர்) என்பர். இறந்தவர்களை வான மங்கையர் கைகூப்பி வீரர் உலகிற்கு அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கையில் இவ்வகைக் கற்களில் இவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் இங்கு கண்டறியப்பட்டுள்ள சதிக்கல்லிற்கு கோயில் கட்டி வழிபட்டுள்ளதை அறிய முடிகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வடஆற்காடு மாவட்டங்களில் நடுகற்கள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது துறையூரில் கண்டறியப்பட்டுள்ள சதிகல் தமிழரின் வரலாற்றின் வெளிக்காட்டாகும். இந்த சான்றுகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என முனைவர் பட்ட ஆய்வாளரும், தொல்லியல் கல்வெட்டியியல் ஆராய்ச்சியாளருமான தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தை சேர்ந்த பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தி தினகரன் செய்திதாளில் கூட அண்மையில் வெளியானது.

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்என்று புறத்திணையில் கூறுகிறது.

Share: