துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



Thuraiyur Omkarakudil

ஓம் கார குடில், துறையூர்


ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய 'ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல்' என்ற உயர்ந்த தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு குருநாதர் 'தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்" அவர்களின் தலைமையில் 1976 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இச்சங்கம் தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

இச்சங்கம் உலகிலேயே ஒப்பற்ற போதனையான 'மனிதனும் கடவுளாகலாம்' என்ற உண்மையை போதித்து வருகிறது. மேலும் முதுபெரும் தலைவன் சுப்பிரமணியர், ஆசான் அகத்தீசர், நந்தீசர், திருமூலர், திருவள்ளுவர், இராமலிங்க சுவாமிகள் போன்ற ஞானியர்களின் திருவடியை பற்றி உருகி பூஜித்தால் ஞானியாகலாம் என்று பரமானந்த சதாசிவ சத்குரு ரெங்கராஜதேசிக சுவாமிகள் தன் தொண்டர்களுக்கும், உலக மக்களுக்கும் அருளுகின்றார்கள்.



ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை சாதி, மதம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வேறுபட்டு 1 மனிதநேயம், ஆன்மநேயம் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு மனிதனை மனிதனாக மட்டும் வாழச்சொல்லாமல் அவனை கடவுள் நிலை அடைவதற்கும் வழிகாட்டுகிறது. மேலும் மனிதன் இயற்கையின் படைப்பு என்ற உண்மையையும் மனம், உடல், ஆன்மா என்ற ஆழமான மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி உலகிற்கு உண்மை ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இச்சங்கம் ஏழைகளுக்கு பசி என்னும் பிணியை போக்கி வைப்பதன் மூலம் பெறும் புண்ணியத்தையும், ஞானிகளை வணங்குவதன் மூலம் அவர்களின் அருளையும் கொண்டு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியை போக்கியும், பல்வேறு அறப்பணிகளை செய்து, உண்மை ஆன்மீகத்தையும், ஞானிகளின் பெருமையையும் நிலைநாட்டி தலைநிமிர்ந்து நிற்கின்றது. குருநாதர், தவத்திரு. ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத் தொண்டர்கள் உலகம் முழுவதும் கிளைகள் அமைத்து தங்கள் குருநாதர் காட்டிய பாதையில் ஞானிகளின் பெருமையை பேசியும், தர்மத்தை செய்தும் வருகின்றனர்.