திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் அமைந்துள்ள கருப்பம்பட்டி என்கிற கிராமத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இறந்துபட்ட முன்னோர்களை வழிபடும் வழக்கம் மிகத் தொன்மையானது. உலகம் முழுவதும் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதனை ஆய்வாளர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளனர்.
இறந்துபட்ட முன்னோர்களின் வழிபாடே பிற்காலத்தில் கடவுளர் உருவங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாயின என்று பலஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த நினைவுக்கல் சுமார் 4 அடி உயரத்தில் காணப்படுகின்றது. இந்த வீரக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். சங்க காலத்தில் தமிழகத்தில் நடுகல் வழிபாடு பற்றிஅவ்வப்போது சில ஆய்வுரைகள் வெளியிடப்பட்டாலும் முழுமையான வரலாறாக அவை விரித்துரைக்கப்படவில்லை என்றேதான் தோன்றுகிறது. இதுப்போன்று பல வகையான கல்கள் இருந்துள்ளன என ஆரய்சியளர்க்கள் கூறுகின்றனர்.
அவையவன:
- நரை மீட்டோர் கல்
- வடக்கிருந்தோர் கல்
- பத்தினிப்படிமக்கல்
- கடலுள் மாய்ந்தோர் கல்
- ஊர்காத்தான் கல்
- பெண் மீட்டான் கல்
- அறம் காத்த நடுதல் கல்
- கழி பேராண்மைக் கல்
- சாவாரப்பலிக்கல்
- அடியார் சமாதி
- அரசர் பள்ளிப் படை
- புலிக் குத்திக் கல்
- பன்றிக் குத்திக் கல்
- குதிரைக் குத்திக் கல்
- எருது பொருதார் கல்
- மாடுபொறித்த கல்
- யானைப் போர் நடுகல்
- நாய்க்கு நிடுகல்
