கரட்டாம்பட்டி வரலாறு
திருச்சி மாவட்டம் , துறையூர் அருகே , துறையூர் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் கரட்டாம்பட்டி. இந்த ஊரில் ஜெயராம் பொறியியல் கல்லூரியின் பின்புறம் இருபுறமும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழிலும், சுத்தமான காற்றும் , மன அமைதியும் நிறைந்த மிக அருமையான சூழலில் அமைந்துள்ள சத்திரம் எனும் சிற்றூரில் உள்ள சித்தர் சிவபீடம் என்று அழைக்கக் கூடிய சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட சிவாலயமானது ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாக அமைந்துள்ளது.
12 ராசிகளும் சக்கர வடிவில் ஒரே பீடத்தில் அமைந்துள்ளது. மேலும் பீடத்தில் அஷ்டதிக்க ஜங்கள் (யானைகள்), சர்ப்பங்கள் , ராசிகளுக்குரிய அதி தேவதை, பிரத்யதி தேவதைகள், 64 கலைகளை விளக்கக் கூடிய சிற்பங்கள் இவையனைத்தும் இந்த ராசி பீடத்தில் ஒரு சேர அமையப் பெற்றுள்ளது. பீடத்தின் மேலே அனுக்ரஹமூர்த்தியாக ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் அருள்பாலிக்கின்றார். இந்தியாவிலேயே இந்த ஒரு ஆலயத்தில் மட்டுமே இத்தகைய அமைப்பு உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. பழைமை வாய்ந்த கட்டிடம் சிதையுற்ற நிலையில் இங்கு இன்னும் உள்ளது, இதுவே வரலாற்று பதிவாகும்.
மேலும், பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமுர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யர். ஐஸ்வர்யமகாலக்ஷ்மி , சரஸ்வதி தேவி.ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி , அரசு வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவகிரகங்கள், கால பைரவர் முதலான தெய்வங்களுடன் , சாரங்கநாதர் எனும் சித்தர் பெருமான் இந்த ஆலயத்தில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரப் பெருமானை வழிபாடு செய்து இந்த ஆலயத்திலேயே ஜீவ சமாதி அடைந்ததாக கருதப்படுவதால் அவரது நினைவாக சித்தர் சன்னதி உருவாக்கப்பட்டு ,அவர் தவம் செய்த இடத்தில் துளசி மாடமும், மகாலிங்கமும் அமையப் பெற்று முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராசிக் கோவில் என அழைக்கப்படுகின்ற சித்தர் சிவ பீடத்தில் உறையூரை ஆண்ட ராணி மங்கம்மாள் சிவனடியார்கள் தங்கி உணவருந்தி சுவாமியை வழிபட ஏதுவாக அன்னதான சத்திரம் கட்டிக் கொடுத்துள்ளார். காலப்போக்கில் அந்தக் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 63 நாயன்மார்கள் மற்றும் சமயக் குரவர்கள் நால்வர் முதலானவர்களை பக்தர்களின் உபய கைங்கர்யத்தால் பிரதிஷ்டை செய்யும் திருப்பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.