ஆலத்துடையான்பட்டி வரலாறு
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள ஆலத்துடையான்பட்டி கிராமம் பலம்பெறும் வரலாற்று சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சோமநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது கி.மு., 300 ஆண்டு கால கட்டங்களுக்கு முன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் திரிபுவன சக்கரவர்த்தி என்ற மன்னன் கொல்லிமலையில் உள்ள கோமசுந்தரேஸ்வரர் கோவிலில், குழந்தை வரம் வேண்டி பூஜை செய்தபோது, சிவனே நேரில் தோன்றி, தான் பெருநாவலூர் எனும் ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் உள்ளதாகவும், அங்கு கோவில் அமைக்க இறைவன் கட்டளையிட்டதாகவும் புராண கதை வாயிலாக நாம் அறிகின்றோம். அதன் பேரில் திரிபுவன சக்கரவர்த்தி ஆலத்துடையான்பட்டியில் உள்ள வன பகுதியில் கோவில் அமைத்தாகவும் கூறப்படுகிறது.
இது போன்று ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ் கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை போன்றவை கோவில்கள் மற்றும் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றது. இந்த கோவிலில் பழந்தமிழ் கல்வெட்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
