இரத்த தான முகாம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியில் அமைந்துள்ள நேரு நினைவுக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், சக்தி சுழற் சங்கம் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையும், துறையூர் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இரத்ததான சிறப்பு முகாம் 06.07.2018 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 9.30 மணியளவில் மூக்கப்பிள்ளை கலையரங்கில் தொடங்கியது.
கொடையாளிகளின் இரத்தம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெறும் ஏழை எளியோருக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அரசு சார்பாக நடைபெறும் இந்த இரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
Share: